திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (12:03 IST)

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே ஒரு பயணியா? திடுக்கிடும் வீடியோ

பெரும் எதிர்பார்ப்புடன் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் இருப்பதால் பெரும்பாலான பயணிகள் அதனை பயன்படுத்தவில்லை என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக பகல் நேரத்தில் வெகுசில பயணிகளுடன் தான் மெட்ரோ ரயில் இயங்குகிறது. ஒரு மெட்ரோ ரயிலில் 1276 பேர் பயணம் செய்யலாம் என்ற நிலையில் நேற்று ஒரே ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ததாக அந்த பயணியே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதனை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் மறுத்தபோதிலும், கண்டிப்பாக பத்துக்கும் குறைவான பயணிகளே பயணித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது

எனவே மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை ஏற்று கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் குறைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்