தாய்மொழி கல்வி மட்டுமே இலவசம்; தமிழக அரசு அதிரடி முடிவு
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி பயில கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளை தொடங்கியது. தற்போது சுமார் 3 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வியை பயின்று வருகின்றனர். தமிழ் மீடியம் போல ஆங்கில மீடியத்திற்கும் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியை போக்க ஆங்கில மீடியம் பயிலும் மாணவர்களிடம் இருந்து டியூசன் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் பயிலும் மாணவர்களிடம் ஆண்டுக்கும் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் ரூ.10 கோடி வசூலிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.