திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி?
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை தீப திருவிழா நாளை நடைபெற உள்ளதை அடுத்து இந்த திருவிழாவை காணவும் தீபத் திருவிழாவின்போது கிரிவலம் செய்யும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது கிரி வலத்திற்கு 20 ஆயிரம் பேர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இந்த விளக்கத்தை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது