1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:50 IST)

இணைய வழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இணையவழியில் தமிழ் கற்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழ் இணைய கல்வி கழகம் என்பது தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இணையவழியில் உலகெங்கும் உள்ளவர்களுக்கு தமிழ் கற்பித்தலில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் முதன்மையான நோக்கமாகும்.
 
மேலும் தமிழ் இலக்கியம் கலை கலாசாரம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இணையவழியில் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விபரங்களை தமிழ் இணைய கல்வி கழகம் வழங்கி வருகிறது
 
இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள் தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் முழு விவரம் இதோ