புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:05 IST)

எத்தனை டிக்கெட் புக் செய்தாலும் ஒரே சர்வீஸ் சார்ஜ்: கடம்பூர் ராஜூ அதிரடி!

ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணத்தில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. 
 
பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை டிக்கெட் விலையை உயர்த்தி திரையரங்கினர் விற்பனை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 வரை சேவைக்கட்டணம் பெறப்படுகிறது. 
 
இந்த நிலையை மாற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விரைவில் ஆன்லைனி மட்டுமே சினிமா டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அரசு நிர்ணயித்த விலையில் அரசின் செயலி மூலமே இனி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். 
இந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது, ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவைக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இனி எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
 
இந்த சேவை கட்டண் மாற்றம் இந்த மாத இறுதியின் செயல்முறைக்கு வரும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.