1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:55 IST)

ஆர்.கே.சுரேஷிற்கு மீண்டும் சம்மன்.. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்..!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷுக்கு ஆருத்ரா மோசடி புகாரின் விசாரிக்க மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
ஆருத்ரா  மோசடி புகாரில் நடிகர் ஆர் கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் துபாயில் இருந்து சென்னை வந்தவுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார். 
 
அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் ஆர்கே சுரேஷ் அளித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியிடம் விவரங்கள் கேட்டு பெற பொருளாதார குற்றப்பிரிவு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
அவர் அளித்த அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்து பின்னர் ஆர் கே சுரேஷ்க்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva