திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:59 IST)

ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000 ரூபாய்: அகதியாக தமிழக வந்த இலங்கை தமிழர்கள் தகவல்!

chillies
இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகி விட்டதாகவும் எந்த ஒரு அத்தியாவசியப் பொருள்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ல் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதாகவும் இன்று தமிழகத்துக்கு வந்த அகதிகள் தெரிவித்துள்ளனர் 
 
இன்று அதிகாலை 3 மணிக்கு மண்டபம் அருகே 15 இலங்கை தமிழர்கள் பைபர் படகுகள் மூலம் இந்தியா வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்து அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 
 
வர்களிடம் பேசியபோது இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களின் விலை கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு விலை உச்சத்தில் இருப்பதாகவும் அதனால் தான் பசியினால் மரணம் ஏற்படுவதை தடுக்க இந்தியாவுக்கு வந்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்