1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (09:57 IST)

திருச்செந்தூர் கடலில் குளித்த பக்தர் நீரில் மூழ்கி பலி.. வைகாசி விசாகம் தினத்தில் சோகம்..!

Tiruchendhur
இன்று வைகாசி விசாகம் என்பதால் திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் கூடி இருக்கும் நிலையில் திருச்செந்தூர் கடலில் குளித்த ஒரு பக்தர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று வைகாசி விசாகம் திருச்செந்தூர் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதலே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் முன்பு கடலில் ஒரு பக்தர் குளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென ராட்சச அலை அவரை அடித்துச் சென்றது. இதனை அடுத்து மீனவர்கள் உதவியால் அவர்  மீட்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த செல்வ கனி என்பவர் தான் கடலில் இறந்தவர் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் திருச்செந்தூர் கடலில் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Edited by Siva