1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (08:05 IST)

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா
திருச்செந்தூர் முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்த நிலையில் காலை 10 மணிக்கு உச்சிகால அபிபேஷம், தீபாராதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்தனர். மேலும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களை போலீசார் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் மட்டுமின்றி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் வைகாசி விசாகம் நிகழ்ச்சி நடந்து வருகிறது என்பதும் பக்தர்கள் அதிக அளவில் கூட இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது என்பதும் முருகனை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva