1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (12:52 IST)

ஒரு கோடி கொள்ளை: திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்

திருச்சியில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஆம்னி பேருந்தில் இருந்து இறங்கினர். அப்போது அங்கே காரில் வந்த மர்ம கும்பல் நிதி ஊழியர்களிடம் இருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
 
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கண்டோன்மென்ட்  போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருச்சியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.