1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (20:13 IST)

ஒரே நாடு ஒரே ரேஷனுக்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு ஏற்கனவே வைகோ உள்பட ஒருசில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
 
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது. தமிழகத்தில் பொது விநியோக முறை மிக சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் இணைந்தால் அந்த முறையே பாதிக்கப்படும். பிற மாநில மக்கள் நலன்பெற்று, தமிழக மக்கள் பாதிக்கப்பட்டும் நிலை உருவாகும். இந்த திட்டம் உள்பட மத்திய அரசின் மோசமான திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து துணை போகிறது. இந்த திட்டம் தொடர்பாக 1.99 கோடி கார்டு உரிமையாளர்களிடமும், சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் ஜனநாயக ரீதியாக கருத்து கேட்க வேண்டும். ஆனால் அப்படி எந்த விதமான கருத்தும் கேட்காமல் அரசு முடிவெடுக்கிறது. இது மக்களுக்கும், மாநில உரிமைக்கு எதிரானது’ என்று தெரிவித்தார்.
 
 
வைகோ, ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல்வாதிகளும் கூறுவது தமிழகத்தில் வாழும் வெளிமாநில மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கக்கூடாது என்பதுதான். அதே சமயம் இந்த திட்டத்தால் வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் பயன்பெறுவார்கள் என்ற கோணத்தில் அவர்கள் பார்ப்பதில்லை என்ற ஆதங்கமும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது