1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , வெள்ளி, 8 மார்ச் 2024 (08:36 IST)

மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி குலதெய்வ கோவிலுக்கு இரட்டை மாட்டு டயர் வண்டியில் பயணம்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள்   மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மாசி பச்சை என்று அழைக்கக்கூடிய திருவிழாவான மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோயிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு  டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து  வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலம் சாமி பொட்டி அழைப்போடு நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோயில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்து ஊர்வலம் தொடங்கி டயர் மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர்.
 
இதுகுறித்து கிழக்குத் தெரு பொதுமக்கள் கூறியதில் அக்காலத்திலிருந்து 7 வருடத்திற்கு ஒருமுறை டயர் வண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக டயர் வண்டியில் சென்று மாசி பச்சை திருவிழாவை கண்டு  சுவாமியின் தரிசனம் பெற்று வருவதை      வழக்கமாகக் கொண்டுள்ளோம் என பெருமிதமாக கூறினார்கள்.
 
இன்றைய நவநாகரிக  காலத்திலும் டயர் வண்டியில் படித்தவர்கள் முதல் அனைவரும் ஒன்றாக இணைந்து அக்காலத்தில் செல்வது போன்று டயர் வண்டியில் செல்வோம் என தெரிவித்தனர். 
 
நிலக்கோட்டை பகுதி பொதுமக்கள் இக்காலத்திலும் இப்படி  டயர் வண்டியில் செல்வதை கண்டு வியப்பாகவும் அதேசமயம் பயபக்தியுடன் வழி அனுப்பி வைத்தனர்.