வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (10:30 IST)

'கிராம உதயம்' சார்பில், பெண்களுக்கு விருது வழங்கும் விழா-ஏ.பி.ஜே அப்துல்கலாமின்பேரன் பங்கேற்பு....

தூத்துக்குடி மாவட்டம்,மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில், சிறப்பான தொண்டுகள் புரிந்த கிராம பெண்களுக்கு ஏபிஜே அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா,மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் 2000 மஞ்சள் துணிப்பைகள் வழங்கும் விழா தூத்துக்குடியை அடுத்துள்ள முத்தையாபுரத்தில் நடைபெற்றது. 
 
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை இணை இயக்குனரும், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம் தலைமை தாங்கி,குத்து விளக்கேற்றி வைத்து, விழாவை தொடங்கி வைத்தார்.
 
விழாவுக்கு கிராம உதயம் அமைப்பின் மேல ஆழ்வார்தோப்பு நிர்வாக கிளை மேலாளர் ஏ.வேல்முருகன், தனி அலுவலர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.புகழேந்தி பகத்சிங் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பான தொண்டுகள் புரிந்த கிராம பெண்களுக்கு ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் ஷலீம் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 
 
கிராம உதய பகுதி பொறுப்பாளர்கள் கருத்துரை வழங்கினர். கிராம உதயம் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் வி.சுந்தரேசன் நன்றி கூறினார்.