1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 ஜனவரி 2022 (15:38 IST)

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு! – அடுத்த அதிர்ச்சி

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரானின் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறை கொரோனா பாதிப்பு குறையும்போது கொரோனாவின் புதிய மாறுபாடுகள் உருவாகி மீண்டும் பாதிப்பை அதிக்கப்படுத்துகின்றன.

அந்த வகையில் தற்போது பரவி வரும் ஒமிக்ரான் இதுவரையிலான மாறுபாடுகளில் வேகமாக பரவுவதாக உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரானின் மாறுபாடான பி.ஏ.2 திரிபை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டன், டென்மார், நார்வே ஆகிய 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய மாறுபாடு தற்போதை ஒமிக்ரானை விட வேகமாக பரவும் என கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.