ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (09:01 IST)

ஆப்பு வைத்த அம்லெட்... அம்மா உணவக விற்பனை சர்ச்சை!

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்ததால் மகளிர் குழுவின் ஒப்பந்தம் ரத்து. 

 
அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்துள்ளதால் இதனி அதிகரிக்க விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆம், மண்டலம் வாரியாக கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளில் நடைபெறும் 3 மாத விற்பனையின் அடிப்படையில் தினமும் குறிப்பிட்ட அளவுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படவுள்ளது. 
 
இந்நிலையில் மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரத்தில் மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இதனைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய மகளிர் குழுவிற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் தகவல் அளித்துள்ளார்.