வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2024 (16:12 IST)

தீ மிதி விழாவில் தவறிவிழுந்த பெண் பக்தர் காயம்: சென்னை அருகே பரபரப்பு..!

சென்னை அருகே நடந்த தீமிதி விழாவில் தவறி விழுந்து காயம் அடைந்த ஒருவரை, மருத்துவமனையில் அனுமதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை அருகே வியாசர்பாடியில் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் தீமிதிக்கும் போது திடீரென கால் தவறி விழுந்ததால், அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பெண் பக்தரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டதால், அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர், சில நிமிட பதற்றத்திற்கு பின், தீமிதி திருவிழா மீண்டும் தொடரப்பட்டது.

இது தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran