1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified திங்கள், 4 ஜூலை 2022 (13:32 IST)

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்ந்தது!!

விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை  எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. 

 
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி நிலையில் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை இரு மடங்காக உயர்ந்தது. போருக்கு முன்னதாக லிட்டர் ரூ.100க்கு விற்கபட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது லிட்டர் ரூ.200க்கு விற்கப்பட்டது. மற்ற வகை எண்ணெய்களும் விலை உயர்வை சந்தித்துள்ளது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில் விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை  எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. விருதுநகரில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.280 க்கும், கடலை எண்ணெய் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
மேலும், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் ரூ.130க்கும் சூரியகாந்தி  எண்ணெய்ரூ.175 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.