ஓபிஎஸ் மகன் மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்: இது தான் காரணமா?


Caston| Last Modified சனி, 11 ஜூன் 2016 (11:01 IST)
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கட்சியில் வகித்த தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியை சமீபத்தில் பறித்தார் முதல்வர் ஜெயலலிதா.

 
 
சமீபத்தில் கோகுல இந்திரா உள்ளிட்ட பலரின் கட்சி பதவிகளை அதிரடியாக பறித்தார் முதல்வர் ஜெயலலிதா. இதில் ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாக தாக்காத ஜெயலலிதா அவரை சுற்றி இருப்பவர்களை களையெடுத்தார். இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனின் பதவியும் பறிக்கப்பட்டது.
 
ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கில் அதிமுகவின் தேனி மாவட்டச் செயலாளராக வந்தவர் சிவகுமார். இவர் அதற்கு விசுவாசமாக இருப்பதற்காக பேருக்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தான் மாவட்டச் செயலாளர் போல் வலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ரவீந்திரநாத் வைத்தது மட்டும் தான் அங்கு சட்டம், நிழல் மாவட்டச் செயலாளராக வலம் வந்த இவரை பற்றிய புகார் ஜெயலலிதாவின் பார்வைக்கு சென்றுள்ளது. எப்பொழுதுமே கட்சியை கட்டுக்கோப்பாக வைக்க எத்தகைய அதிரடி முடிவையும் எடுக்க தயங்காத ஜெயலலிதா சட்டையை எடுத்துள்ளார்.
 
தேனி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் மற்றும் நிழல் மாவட்டச் செயலாளர் போல் செயல் பட்டு வந்த பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வகித்த தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியையும் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. புதிய மாவட்டச் செயலாளராக தங்க.தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :