செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (13:56 IST)

கதறி அழுத ஓ.பி.எஸ் - சத்தியம் செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட அவசர கூட்டம் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது.


 

 
கடந்த 70 நாட்களுக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  
 
அதைத் தொடர்ந்து, அவரின் இருதயநாள அடைப்பை சீர் செய்வதற்காக ஆஞ்சியோ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் உடல்நிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவர்களால் கண்காணிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “அம்மா விரைவில் குணம் அடைவார். இந்த சமயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்” என்று கூறினாராம். மேலும், அதற்கு மேல் பேச முடியாமல் கதறி அழுதார் எனவும், கூட்டத்தின் முடிவில் “நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். அம்மாவின் கனவை நினைவாக்க கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம்” என அதிமுக எம்.எல்.ஏக்கள் உறுதியுடன் தெரிவித்தார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.