1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. North madress - Actress Samantha - out

எஸ்கேப்பான சமந்தா - கோலிவுட் அதிர்ச்சி

நடிகை சமந்தா
வட சென்னை படத்திலிருந்து நடிகை சமந்தா எஸ்கேப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.
 

 
இயக்குநர் வெற்றி மாறன்  படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் தனுஷ் நடிப்பில், வட சென்னை படம் வருவாகி வருகிறது. இந்தப் படம் இரு பாகங்களாக வெளிவரும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், வட சென்னை மூன்று பாகங்களாக வெளிவரும் என்று நடிகர் தனுஷ் அறிவித்தார். இந்தப்படத்தில் நடிகர் தனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா முதல் பாகத்தில் நடிக்க இருந்தார்.
 
இந்த மூன்று பாகம் என்பதாலும், இரண்டு வருடங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் என்பதாலும், கால்ஷீட் பிரச்னை வரும் என்பதால், அதைத் தவிர்க்கவே வடசென்னை படத்திற்கு நடிகை சமந்தா குட்பை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தாவின் இந்த முடிவு ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சுற்றுலா