1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:26 IST)

பைக் ரேஸ் செய்தால் பைக் பறிமுதல்; பெற்றோர் மீது வழக்கு!? – காவல்துறை எச்சரிக்கை!

Race
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பைக் ரேஸர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தயாராகி வருகிறது. சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு சமயத்தில் இளைஞர்கள் பலர் பொதுசாலைகளில் பைக் ரேஸ் செய்வது சமீப காலமாக பெரும் பிரச்சினையாக உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. அதில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களது பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K