புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:59 IST)

திருவாரூரில் வேட்புமனுக்களைத் திருட முயற்சி – பணம் கொள்ளை !

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேட்புமனு தாக்கலுக்கு நாளைதான் கடைசி நாளாகும்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்களைத் திருட முயற்சி நடந்துள்ளது.  ஊராட்சி செயலாளர் கணபதி, அலுவலகத்தை திறந்த போது வேட்புமனுக்களை வைத்திருந்த பிரோவ் கீரல்களுடன் காணப்பட்டுள்ளது. பீரோவை உடைக்க முற்பட்டு அது முடியாததால் அங்கிருந்த ரூ 1500 பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.