புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (08:21 IST)

பக்தியில் உருகும் பெண்கள், அசடு வழியும் ஆண்கள்… இவர்கள்தான் என் இலக்கு – செல்போன் திருடி பானு !

சென்னையில் கோயில்களிலும் பேருந்துகளிலும் செல்போன் மற்றும் நகைகளைத் திருடும் பானு என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் செல்போன் திருடியதாக பானு என்ற பெண் கைது செய்யப்பட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளின் மூலம் மஃப்டியில் இருந்த போலிஸார் அவரைப் பிடித்தனர்.

அவரிடம் விசாரித்ததில் பானு இது போல திருட்டு வழக்குகளில் அடிக்கடி சிறைக்கு செல்வதும் பின்பு ஜாமீனில் வெளிவந்து திருட்டு வேலைகளில் இறங்குவதும் என வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கோயில்களில் தன்னை மறந்து கடவுளை வணங்கும் பெண்களிடம் தன் வேலையைக் காட்டும் பானு, கூட்டமான பேருந்துகளில் ஏறி ஆண்கள் அருகே நின்று அவர்களிடம் பேச்சுக்கொடுத்து திசை திருப்பி அவர்களின் பர்ஸ் மற்றும் செல்போன்களை திருடுவதில் கில்லாடி என சொல்லப்படுகிறது.