ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (08:17 IST)

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா: விஐபிகளுக்கு பாஸ் வழங்க தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விஐபி பாஸ் வழங்க முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

 கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தீப திருவிழாவை காண வந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கார்த்திகை தீப திருவிழாவுக்கு விஐபி பாஸ் வழங்க முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும்  கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறியுள்ளார்.

 மேலும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Edited by Siva