1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (11:55 IST)

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: மருத்துவர்கள் அறிவுரை

இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது. இந்த சமயத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் வேறுவகை உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் குறைந்தது 6 முதல் 8 வாரங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது என அறிவுறுத்தி உள்ளனர்.
 
ஆனால் அதே நேரத்தில் சிசேரியன் மற்றும் தவிர்க்க முடியாத குடலிறக்க அறுவை சிகிச்சைகளை மட்டும் செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.