வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 மார்ச் 2017 (07:05 IST)

பொதுத்தேர்வு முடியும் வரை மின்வெட்டு இல்லை. அதிகாரிகள் அறிவிப்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடங்கவுள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் பராமரிப்பு பணிக்காக செய்யப்படும் மின்வெட்டு தேர்வு முடியும் வரை இருக்காது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.




இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பொதுத் தேர்வுகள் நிறைவடையும் வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிக்கப்பட்ட மின்தடைகள் கிடையாது. தேர்வு சமயத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டால் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும். தேர்வுகள் நிறைவடைந்ததும் மீண்டும் வழக்கம் போல் மின் தடை அமல்படுத்தப்படும் என்று கூறினார்.

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகளூம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8-ஆம் தேதியும், சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தேர்வு மார்ச் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீடிக்கின்றன. எனவே இன்று முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை பராமரிப்பு காரணமாக செய்யப்படும் மின்வெட்டு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.