1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (07:47 IST)

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட கிடைக்காது: டி.ஆர்.பாலு

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட கிடைக்காது என திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார். மூழ்கும் கப்பலாக இருக்கும் பாஜக எப்படி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்பி சீட்டை கூட கொடுக்க மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைமிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்றும், தமிழ்நாட்டில் வசூலித்து உத்தரப்பிரதேசத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
 
பாஜக ஆட்சியில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை என்பதை புரிந்துகொண்டுள்ளார் அமித்ஷா என்றும், தமிழ்நாட்டில் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த அமித்ஷா முயற்சிக்கிறார் என்றும் டிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva