வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (22:59 IST)

புதிய கட்சி துவக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: டிடிவி தினகரன்

நாளை எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி டிடிவி தினகரன் புதிய கட்சியை திறக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்போதைக்கு புதிய கட்சி துவக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

குன்னூரில் செய்தியாளர்களை இன்று சந்தித்த டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் கலந்து பேசிய பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு புதிய கட்சி தொடங்குவதாக இருந்தால் கண்டிப்பாக அனைவரிடமும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றி இரட்டை இலை சின்னத்தை பெறுவது ஒன்றே தனது குறிக்கோள் என்றும் அது விரைவில் நடந்தேறும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கோத்தகிரியில் ஜெயலலிதா சிலையை டிடிவி தினகரன் திறக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.