புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 31 மே 2020 (12:57 IST)

நாளை முதல் இயக்கப்படும் பேருந்துகளில் புதிய கட்டணமா? போக்குவரத்து துறை விளக்கம்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒருசில நிபந்தனைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது
 
கோவை, தர்மபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம், நெல்லை, திண்டுக்கல், காஞ்சிபுரம், சென்னை என இந்த 8 மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்றும், ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் விண்ணப்பிக்க https://rtos.nonresidenttamil.org என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து துறை  தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது