செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (08:53 IST)

நாவலூர் சுங்க சாவடியில் இனி சுங்க கட்டணம் கிடையாது! – பயணிகள் நிம்மதி!

சென்னை நாவலூர் சுங்க சாவடியில் இன்று முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளில் சுங்கச்சாவடிகள் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி ஐடி சாலையில் உள்ள பெருங்குடி சுங்கசாவடி உள்ளிட்ட சில சுங்கசாவடிகள் மூடப்பட்டன.

அதே சாலையில் உள்ள நாவலூர் சுங்க சாவடியில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கசாவடி உள்ள சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் பல பகுதிகளில் சாலை மூடபட்டுள்ளது. பல பகுதிகளில் சரிவர பராமரிப்பு இல்லை. அதனால் நாவலூர் சுங்க சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Edit by Prasanth.K