புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (14:04 IST)

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை..! திமுகவின் பல அமைச்சர்கள் சிறை செல்வார்கள்..! இபிஎஸ்..!!

edapadi
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மக்களை மட்டுமே நம்பி உள்ளதாகவும், ஆனால் கூட்டணியை நம்பிதான் திமுக உள்ளதாகவும், மக்களை நம்பி இல்லை என்றும் விமர்சித்தார்.
 
அதிமுக ஆட்சியில் தான் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியில் தமிழக மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்றும் மக்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
அதிமுக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு திமுகவின் பல அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

 
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என கூறிய எடப்பாடி, புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.