1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (13:43 IST)

வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை: ராகுல் காந்தி

rahul gandhi
காங்கிரஸ் ஆட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதை அடுத்து வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்க கூட எங்களிடம் பணம் இல்லை என்று ராகுல் காந்தி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது:
 
நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை தான் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது உள்ளது.
 
மேலும் வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும், முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் நிதியை முடக்கியது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல், பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
Edited by Mahendran