மன்னார்குடி மாஃபியா இல்லை.. இனிமேல் இப்படித்தான் அழைப்போம் - மு.க.ஸ்டாலின் கிண்டல்
சசிகலா குடும்பத்தினரை இனி மன்னார்குடி மாஃபியா என அழைக்க மாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 18-ஆம் தேதி சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சசிகலா குடும்பத்தினரை இனிமேல் மன்னார்குடி மாஃபியா என திமுகவினர் அழைக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு, எங்கள் ஊரை அசிங்கப்படுத்த வேண்டாம் என மன்னார்குடியில் வாழும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சசிகலா குடும்பத்தினரை ‘மாஃபியா கும்பல்’ என இனிமேல் திமுகவினர் அழைப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.