1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (23:38 IST)

காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லீவு இல்லை - டிஜிபி சுற்றறிக்கை

தேர்தல் முடிவும் வரை தமிழகக் காவல்துறை அதிகார்கள் மற்றும் காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே தேர்தல் நாளன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படமால் தடுக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர்.

இந்நிலையில், வரும் சட்டசபைத் தேர்தல் முடியும்வரை தமிழகக் காவல்துறை அதிகார்கள் மற்றும் காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.