வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (20:41 IST)

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

Geetha Jeevan
சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக பாமக குற்றம்சாட்டிய நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறிய அமைச்சர் கீதாஜீவன் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
காலை உணவு திட்டத்தை தொடங்கி அரசு சத்துணவு மையங்களை எப்படி மூட முயற்சிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Siva