திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (16:46 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன்; மீண்டும் களமிறங்கும் டிடிவி தினகரன்

அதிமுகவின் 46வது தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.


 

 
சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுகவின் 46வது தொடக்க விழாவை டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன் கூறியதாவது:-
 
எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் அதிமுக ஆண்டு விழாவை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டெல்லியில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்கள் போலியானவையாகும்.
 
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த காலக்கெடு போதுமானது அல்ல. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். கடந்த முறை நான் வெற்றி பெறுகிற சூழலில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றார்.