விடுமுறை நீட்டிப்பு இல்லை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!
அரையாண்டு தேர்வு விடுமுறை நீடிப்பதாக ஒரு சில சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், விடுமுறை நீட்டிப்பு இல்லை என்றும், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில், நேற்றுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனிடையே, அரையாண்டு தேர்வு விடுமுறை நீடிக்கப்படும்" என சமூக வலைதளங்களிலும், ஒரு சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
ஆனால், இன்று பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு செய்யப்படலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், ஜனவரி 2 ஆம் தேதி திட்டமிட்டபடி தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு என்ற வதந்தியை நம்பாமல், அனைத்து மாணவர்களும் பள்ளி செல்ல தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva