1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2023 (16:27 IST)

ரயில் நிலையங்களின் பெயரை தெரிந்து கொள்ள புதிய வசதி.. இனி குழப்பமே இருக்காது..!

south railway
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரயில் நிலையங்களின் பெயரை அறிந்து கொள்வதில் சில சமயம் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படும். இந்த நிலையில் தற்போது அதற்கு புதிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 
 
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரயில் நிலையங்களின் ஊரை டைப் செய்தவுடன் அதன் அருகில்  உள்ள பெரிய நகரங்களின் பெயரும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக தாம்பரம் என்ற ரயில் நிலையத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் அதன் அருகில் சென்னை என்று தானாகவே வந்துவிடும். இதன் மூலம் சிறிய ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போது குழப்பம் இல்லாமல் இருக்கும். 
 
அதேபோல் சுற்றுலா தளங்கள் உள்ள  நகரங்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போதும் அதன் அருகில் உள்ள பெரிய நகரங்களின் பெயர்கள் தானாகவே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது 
 
புறநகர் ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போதும் அதேபோல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இனி ரயில் நிலையங்களில் பெயரை தெரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva