1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (12:47 IST)

சாதி பெயர் சொல்லி திமுக பிரமுகர் திட்டியதாக புகார்: 200 பெண்கள் சாலைமறியல்..!

சாதி பெயர் சொல்லி திமுக பிரமுகர் திட்டியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் திடீரென 200 பெண்கள் திருப்பத்தூரில் சாலைமறியல் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பழைய அத்திகுப்பம் பெண்களை சாதி பெயர் சொல்லி திமுக பிரமுகர் சாமு என்பவர் திட்டியதாக புகார்  எழுந்துள்ளது. அவர் மதுபோதையில் பெண்களை ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே திமுக பிரமுகர் சாமுவை கண்டித்து 200க்கும் மேலான பெண்கள் சாலைமறியல் செய்து வருகின்றனர். அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ள பொம்மிகுப்பம் பெண்களிடம் ஊராட்சி மன்ற தலைவர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran