1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (04:54 IST)

'இரட்டை இலை' இல்லாததால் வேட்பாளர் மாற்றமா? டிடிவி தினகரன் பதில்

நேற்று நள்ளிரவு தேர்தல் ஆணையம் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முடக்கியுள்ளதால் டிடிவி தினகரன், மதுசூதனன் ஆகிய இருவருமே தற்போது சுயேட்சை வேட்பாளர்களாக மாறியுள்ளனர். இருவரும் இன்று காலை தங்களது சின்னத்தை தேர்வு செய்து முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


 



இந்நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் டிடிவி தினகரன் போட்டியிடுவது சந்தேகம் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. இதுகுறித்து நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:

இரட்டை இலைச்சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது, நிச்சயம் அதனை மீட்டெடுப்போம் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா மீட்டெடுத்ததுப்போல் கட்சியையும் சின்னத்தையும் மீட்போம்.

இரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அல்ல, அனுபவம் தான் சின்னம் முடக்கப்பட்டிருப்பது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருப்பது பின்னடைவு அல்ல. ஏற்கனவே இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. அதை மீட்டெடுத்த அனுபவம் எங்களுக்கு உள்ளது

ஆர்கே.நகர் வேட்பாளர் நான் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. இடைத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்.