1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (14:06 IST)

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் மற்றும் சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் எம்எல்ஏக்கள் காலமான நிலையில் இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பீகார் சட்ட மன்ற தேர்தல் உடன் இந்த இடைத் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீகார் சட்ட மன்ற தேர்தல் அறிவிப்புடன் இடைத் தேர்தல் அறிவிப்பு வரவில்லை 
 
இந்த நிலையில் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலி ஆகி 6 மாத கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து தற்போது தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் சூழல் தற்போது இல்லை என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் வசந்தகுமார் எம்பி அவர்களின் மறைவால் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றும் கொரோனா காரணமாக தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பதல் அந்த தொகுதியின் தேர்தல் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது
 
மேலும் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இடைத்தேர்தல் தேவையில்லை என்ற முடிவை தமிழக தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது