வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (11:20 IST)

என்.எல்.சி. விவகாரம்.. விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வழக்கு..!

என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளிடமிருந்து கைப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 
 
என்எல்சி கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நிலம் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவு 121 படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள நீதிபதியின் எஸ்எம் சுப்பிரமணியம் முன்பு முறையீடு செய்யப்பட்டதை அடுத்து இன்று பிற்பகலில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran