திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (19:37 IST)

உக்ரைன் போர் நிறுத்த அட்வைஸ் செய்த நித்தியானந்தா!

Nithyanandha advice to destroy corona virus
சமாதி தியானம் செய்தின் மூலம் ரஷ்யா –உக்ரைன் போரை முடிவுக்கு வரும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

தமிழகத்தில் சர்ச்சை சாமியாராக வலம் வந்தவர் நித்தியானதா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீஸார் தேடி வருகின்றனர். தற்போது கைலாசா என்னும் தீவுக்கு தன் பக்தர்கள் உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13 ஆம் தேதி ஒரு வீடியோவில் தோன்றி, தான் சமாதி மன நிலை அடைந்திருப்பதாகக் கூறி விரைவில் குணமடைவதாகத் கூறினார்.

இந்நிலையில், ரஷ்யா –உக்ரைன் இடையான போர் குறித்து  நித்தியானந்தா அவர் தெவித்துள்ளதாவது: ரஷ்யா –உக்ரைன்  போரில் இரு நாட்டினர் மட்டும் பாதிக்கப்படவில்லை; ஆனால், 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிகப்பட்டுள்ளன. சமாதி தியானம் மூலம் இந்தப் பிரச்சனைகள் தவிர்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.