வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 9 டிசம்பர் 2023 (11:11 IST)

கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்.ஐ.ஏ முடிவு.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ முடிவு செய்துள்ள நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஆளுநர் மாளிகை முன்பு திடீரென கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ தானாக முன்வந்து நடத்தியதை அடுத்து அனைத்து ஆவணங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள்  ஆளுநர் மாளிகை முன் தடயவியல் சோதனையை நடத்தினர்.

இந்த நிலையில்  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்னும் ஒரிரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva