தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
தெற்குக் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கஜா புயல் வந்து டெல்டா மாவட்டங்களை சூறையாடிச் சென்றது. இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் மழையும் காற்றழுத்தமும் மாறி மாறி வந்தன.
இந்நிலையில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதி, தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்திற்கு தீவிரமடையும் என்றும் ,இன்னும் இரண்டு நாட்களில் இந்தக் காற்றழுத்தம் புயலாக மாறுமா என்பது குறித்து தெரியவரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சில இடக்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.