1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (20:49 IST)

வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன்!

election
வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 
 
முதல் கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்றும் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாக்காளர் அட்டைகள் இருக்கும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கியூஆர் கோடு வசதியுடன் உள்ள இந்த வாக்காளர் அடையாள அட்டையில் மிகச் சிறிய எழுத்துக்கள் இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது என்றும் வாக்காளர் அடையாள அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்கு உள்ளே ஒட்டப்படும் என்றும் வாக்காளரின் புகைப்படம் மற்றும் அவரது நெகட்டிவ் இமேஜ் இந்த வாக்காளர் அட்டையில் இடம் பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
போலி அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran