காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்மான முறையில் மரணம்

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்மான முறையில் மரணம்


Sugapriya| Last Modified திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (14:03 IST)
பழனி அருகே காதல் திருமணம் செய்த புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்ததாக கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

 
பழனி அருகே உள்ள குமாரகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த பெரிய சாமி மகன் ஜெயராம். (வயது 25). தனியார் பஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். சண்முக வலசு பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகள் நந்தினி (22) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகும் நந்தினி வீட்டில் எதிர்ப்பு வந்ததால் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தினியை ஆடி பண்டிகையை முன்னிட்டு அவரது பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர். அதன் பேரில் ஜெயராம் தனது மனைவியுடன் அங்கு சென்றார்.

இதனிடையே நந்தினி வீட்டுக்கு அருகே ஜெயராம் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஜெயராமின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தன் மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்ததையடுத்து ஜெயராமின் உடலை வாங்கிச் சென்றனர். 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :