செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (20:02 IST)

ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்குண்டு: யார் இந்த மைசூர் வாசுதேவன்?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது தனிப்பட்ட வாழக்கை விவாத பொருளாகியுள்ளது. அவர்களது வாரிசு என்று உருவெடுக்கும் சிலரால், ஜெயலலிதாவின் வாழ்ந்த முறை கேள்வி குறியாகியுள்ளது.
 
தீபக், தீபா, அமிர்தா வரிசையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு புறப்பட்டுள்ளார் ஜெயலலிதாவின் மாற்றாந்தாயின் மகன் மைசூர் வாசுதேவன். இது குறித்து அவர் பேட்டி அளித்தது பின்வருமாறு...
 
ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. எனது அப்பா ஜெயராமனுக்கு இரு மனைவிகள். அதில் முதல் மனைவியின் மகன்தான் நான். என் அம்மா இறந்தவுடன் இரண்டாவதாக சந்தியாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.
 
அப்போது அவர்கள் என்னை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இவர்களுக்கு ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். ஜெயலலிதா என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் சசிகலாதான். 
 
எனது பொருளாதார நிலையை சரி செய்ய எனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு தேவைப்படுகிறது. இதற்காக சட்டப்படி அணுகியுள்ளேன். ஜெயலலிதா ரூ.35,000 கோடியை விட்டு சென்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்ற போது அந்த சொத்தையும் அவர்  வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.