வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (09:32 IST)

எடப்பாடி பழனிசாமி அதிரடி கைது: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!

Edappadi
தடையை மீறி போராட்டம் செய்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது 
 
இந்த நிலையில் தடையை மீறி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி கேபி முனுசாமி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்
 
இதனையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்
 
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர் பி உதயகுமாரை சபாநாயகர் அப்பாவு அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva