ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (11:27 IST)

இங்க இருக்கவங்களுக்கு வேண்டாமா? – மாத்திரை, சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை!

இந்தியாவிலிருந்து சானிட்டைசர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் சானிட்டைசர், முகக்கவசங்கள் போன்றவற்றை மக்கள் அதிகமாக வாங்க தொடங்கியுள்ளனர். இதை பயன்படுத்தி சிலர் சானிட்டைசர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உலக அளவிலேயே சானிட்டைசர், முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. மலேரியாவுக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகளை கொரோனாவுக்கு பரிந்துரைத்துள்ளதால் அதை மற்ற நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்ய பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் மலேரியா மருந்துகள், சானிட்டைசர்கள், முகக்கவசங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்துள்ளது. தற்போது இருக்கும் கை இருப்புகள் இந்திய மக்களுக்கு அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.